இஸ்லாத்திற்கு வரும் முறை
இரு ஷஹாதா கலிமாக்களையும் நாவினால் மொழிய வேண்டும்.
أَشْهَدُ أَنْ لَاإِلهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ
இதன் கருத்தாவது:- உண்மையில் வணங்கி வழிபடத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று உள்ளத்தினால் உறுதி கொள்கிறேன் நாவால் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் அறிகிறேன்.
أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ
மேலும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என நான் அறிந்து உள்ளத்தினால் உறுதி கொள்கிறேன் நாவால் ஏற்றுக் கொள்கிறேன்.
மேலும் அவர் தான் செய்த குப்ர் சம்பந்தப்பட்ட பாவத்திற்காக மனம் வருந்தி தவ்பா செய்ய வேண்டும். மேலும் இப்பாவத்தின் பால் திரும்பமாட்டேன் எனும் எண்ணத்தை தன்னில் வரவழைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இது போன்ற பாவங்ளை விழகி ஒதுங்கி இருக்க வேண்டும்.
குறிப்பு:- இரு கலிமாக்களையும் மொழியாமல் أَسْتَغْفِرُ اللهَ என்று சொல்வதின் மூலம் இஸ்லாத்தில் நுழைந்தவராக கணக்கெடுக்கப்படமாட்டார்.
-
Previous Post
குப்ர் – கொள்கை மறுப்பு
-
Next Post
Al-Quran