நாம் அறிந்திருக்க வேண்டிய ஈமானின் சில பிரதான பகுதிகள்

அல்லாஹ் மனிதர்களின் ஈருலக வெற்றிக்காக பல கட்டளைகளையிட்டுள்ளான். அக்கட்டளைகளிலே முதன்மையானதும் முக்கியமானதும் ஈமான் ஆகும். அதாவது அல்லாஹ்வையும் அவனது ரஸஊலையும் உரியமுறையில் அறிந்து அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதையே ஈமான் எனப்படுகிறது. இந்த மாபெரும் கடமையில் துரோகம் செய்தவர் கடைசியாக ஒதுங்குமிடம் நரகமாகும். அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் அருட்கொடைகளில் மிக உன்னதமானது ஈமானிய பாக்கியமாகும். இந்த அருளுக்கு எதுவும் ஈடாகாது. ஏனெனில் கலிமா சொல்லி அதன் பிரகாரம் இறுதி மூச்சு வரை ஈமானுடன் மரணித்த மனிதன் மாத்திரமே சுவனம் நுழைவான்.


அல்லாஹ்வைப் பற்றிய ஈமான் என்பது :-
இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் றப்பு உள்ளான். அவன் தான் அல்லாஹ்;. அவன் தன்னுடைய படைப்புக்களில் எதற்கும் ஒப்பாக மாட்டான். அவன் சூரியன், சந்திரன், இருள், ஓளி போன்ற எவற்றிற்கும் ஒப்பாக மாட்டான். மேலும் மனிதர்கள், மலக்குமார்கள், ஜின்கள் போன்ற படைக்கப்பட்ட எவருக்கும் எதற்கும் ஒப்பாக மாட்டான் என்று மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாகும்.


அல்லாஹ் படைப்புகளைக் போன்று உடற்தன்மை, சடத்தன்மை கொண்டவனாகவோ அல்லது படைப்புகளைப் போன்று அளவு, பெறுமானம் கொண்டவனாகவோ இல்லை. இவ்வுலகில் நாம் பார்க்கும் அனைத்து படைப்புகளும் ஒவ்வொரு அளவுகளைக் கொண்டதாக கானப்படுகின்றன. அல்லாஹ் வானத்தைப் போன்று பெரும் அளவு கொண்டவனோ அல்லது கடுகு போன்று சிறிய அளவு கொண்டவனோ அல்லது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட அளவு கொண்டவனோ அல்ல. உடற்தன்மை, அளவு, பெறுமானம், வடிவம், உருவம் இவைகள் அனைத்தும் படைப்புக்களின் தன்மைகளாகும். இவை அல்லாஹ்வுக்கு இருப்பதாக நம்பிக்கை கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஆரம்பம், முடிவு, மரணம், தாகம், பசி, உறக்கம், களைப்பு, பிறரிடம் உதவி நாடல், நோய் இது போன்ற மனிதனுக்கு ஏற்படும் அனைத்து பண்புகளை விட்டும்; அல்லாஹ் பரிசுத்தமானவன்.

அல்லாஹ் குர்ஆனிலே சூறா சூறாவிலே “அவனைப் போன்று படைப்புக்களில் எதுவும் கிடையாது அவன் படைப்புகளுக்கு எந்த விதத்திலும் ஒப்பாக மாட்டான்” என கூறியுள்ளான். எனவே இதற்கு மாற்றமான கருத்தை சொல்பவர் அல்குர்ஆனுக்கு முரணாக செயல்படக்கூடிய காபிராக கணக்கெடுக்கப்படுவார்.


மேலும் அல்லாஹ் இடம் எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவன் அல்ல. அதாவது அல்லாஹ்வால் படைக்கப்பட்ட சடப்பொருட்கள் தாம் அமைவு பெறுவதற்கு ஒரு இடத்தை எடுத்துக்கொள்வது போல அல்லாஹ் இடம் எடுத்துக்கொள்பவன் அல்ல. ஏனெனில் அவன் சடமல்ல. ஆகையால் அவன் வானத்தில் இருக்கிறான் என்றோ அல்லது அர்ஷில் இருக்கிறான் என்றோ சுவர்க்கத்தில் இருக்கிறான் என்றோ அல்லது கஃபாவில் இருக்கிறான் என்றோ நம்பிக்கை கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறான நம்பிக்கைகள் குர்ஆன் சுன்னாவுக்கு எதிரானதும், நரகத்தில் சேர்த்துவிடக்கூடியதுமாகும்.

அல்லாஹ் குறிப்பான ஓர் இடத்திலோ அல்லது எல்லா இடங்களிலுமோ குடியிருப்பவனல்ல. அதேபோன்று அவன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்று கூறுவதும் இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு முற்றிலும் முறனான ஒரு கருத்தாகும். இடங்களை படைத்தவனாகிய அல்லாஹ் இடங்களின் பக்கம் ஒருபோதும் தேவைகாணமாட்டான். யாராவது அல்லாஹ் ஓர் இடத்தில் குடியிருக்கிறான் எனக் கூறினால் அல்லாஹ்வை அவனால் படைக்கப் பட்ட இடத்தின் பக்கம் தேவைகாணக்கூடியவனாக ஆக்கிவிட்டான். நஊதுபில்லாஹி மின்ஹஊ.

Post a comment

Your email address will not be published.

Related Posts