அறிந்து கொள்வீர்! அழ்ழாஹ்விற்கு அவனுடைய அடியார்கள் செய்ய வேண்டிய கடமைகளில் மிக முக்கியமானது அவனை, படைப்புகளை விட்டும் தனித்துவப்படுத்தி, அவனுக்கு எதனையும் இணையாக்காமலிருப்பதாகும்.
ஏனெனில் அழ்ழாஹ்விற்கு இணைவைப்பது, ஒரு அடியான் செய்யும் மிகப்பெரும் பாவமாகும். மேலும் இது அழ்ழாஹ் மன்னிக்காத பாவமுமாகும். இது அல்லாத ஏனைய பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.

அழ்ழாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்
إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَآءُ
விளக்கம் :
“நிச்சயமாக அழ்ழாஹ் அவனுக்கு இணைவைப்பதை ஒரு போதும் மன்னிக்க மாட்டான் மேலும் அது அல்லாத ஏனைய பாவங்களை அவன் நாடியோருக்கு மன்னிப்பான்”
அத்தியாயம்: அன் நிஸாஉ வசனம்: 47
இவ்வாறுதான் குப்ரின் அனைத்து வகைகளையும் அழ்ழாஹ் மன்னிக்கமாட்டான்.
அழ்ழாஹ் குர்ஆனில் கூறியுள்ளான்
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَنْ سَبِيلِ اللَّهِ ثُمَّ مَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ
விளக்கம் :
“யாரெல்லாம் இஸ்லாமிய கொள்கையை நிராகரிப்புச் செய்து மேலும் மக்களை இஸ்லாத்தில் நுழைய விடாது தடுப்பார்களோ அவர்கள் அனைவரும் காபிர்களாகும். அவர்கள் குப்ரின் மீது மரணித்தால் அவர்களுக்கு மறுமையில் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. மேலும் அவர்கள் முடிவில்லாத வேதனையை அனுபவிப்பார்கள்.”
அத்தியாயம்: முஹம்மத் வசனம்: 34
முஹம்மத் து அவர்கள் கூறியுள்ளார்கள்
“من شهِدَ أَنْ لا إله إلا الله وحدَهُ لا شريكَ لهُ وأنّ محمدًا عبدُه ورسولُه وأنَّ عيسى عبدُ الله ورسولُه وكلمتُه ألقاها إلى مريمَ وروحٌ منه والجنةَ حقٌّ والنارَ حقٌّ أدخَلَهُ الله الجنةَ على ما كانَ منَ العملِ”
“யார் நிச்சயமாக உண்மையில் வணங்கி வழிபடத் தகுதியானவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை அவன் இணையின்றித் தனித்தவன். மேலும் நிச்சயமாக முஹம்மத் து அவர்கள் அழ்ழாஹ்வின் அடியாரும், தூதருமாவார்கள். மேலும் நிச்சயமாக ஈஸா அவர்கள் அழ்ழாஹ்வின் அடியாரும் தூதரும் மேலும் மர்யம் அவர்களுக்கு அழ்ழாஹ் அறிவித்த நற்செய்தியும் மேலும் அழ்ழாஹ்விடத்தில் சிறப்புப்படுத்தப்பட்ட ரூஹாகும் என்றும் இன்னும் சுவர்க்கம், நரகம் உண்மை என்றும் யார் சாட்சி கூறுகின்றாரோ அழ்ழாஹ் அவரை அவர் செய்த அமலின் பிரகாரம் சுவர்க்கத்தில் நுழைவிப்பான்.”
அறிவித்தவர் : இமாம் புகாரீ, முஸ்லிம்
மற்றுமொரு ஹதீஸில்,
“فإنَّ الله حرَّمَ على النار من قالَ لا إله إلا الله يبتغي بذلكَ وجهَ الله”
“யார் “لا إله إلا الله” என்ற கலிமாவை அழ்ழாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி கூறுகின்றாரோ அவருக்கு அழ்ழாஹ் (நிரந்தர) நரகத்தை ஹறாமாக்கி விடுகின்றான்” என்று வந்துள்ளது.
அறிவித்தவர் : இமாம் புகாரீ
மேலும் நிச்சயமாக உண்மையில் வணங்கப்படத் தகுதியானவன் அழ்ழாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்று சாட்சி கூறுவதோடு முஹம்மத்  அவர்கள் அழ்ழாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் என்ற நம்பிக்கையை இணைப்பது கடமையாகும். மேலும் அதுவே நரகில் நிரந்தரமாக இருப்பதை விட்டும் பாதுகாப்பு உண்டாகும் விடயத்தில் மிகக் குறைந்த பட்சமாகும்.

Post a comment

Your email address will not be published.

Related Posts