குப்ர் – கொள்கை மறுப்பு

நாம் இயன்ற அளவு எமது நாவுகளை பாவமான விடயங்களை பேசுவதை விட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஓர் அடியான் தேவையற்ற வீணான பாவமான சில வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் மூலம் சில வேலை அவன் தன்னை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிடுவான். அல்லாஹ் எங்களை அதை விட்டும் பாதுகாப்பானாக.

மேலும் சில விடயங்களை உள்ளத்தினால் நம்பியிருப்பதினாலும் இன்னும் ஓர் சில விடயங்களை செய்வதினாலும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிடுவான். எனவே ஓர் அடியானை இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய விடயங்களை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்துவைத்திருப்பது அவசியமாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்த குப்ர் அதாவது கொள்கை மறுப்பு மூன்று வகைப்படும்


முதலாவது :- உள்ளத்தினால் ஏற்படக்கூடிய குப்ர் உதாரணமாக உதாரணமாக அல்லாஹ் மனிதனைப் போன்றவன் என்று நம்பியிருத்தல், அல்லாஹ் ஒளியைப் போன்றவன் என நம்பியிருத்தல் அல்லாஹ் பெரும் உடல் கொண்டவன் என நம்பியிருத்தல் அல்லாஹ்வுக்கு உறுப்புக்கள் இன்னும் தோற்றம், வடிவம், உருவம், அளவு போன்றவை இருப்பதாக நம்பியிருத்தல், அல்லாஹ் தஹஜ்ஜுத் உடைய நேரத்தில் கீழ் வானத்திற்கு இறங்குவதாக நம்பியிருத்தல் மேலும் பல உதாரணங்களை சொல்லலாம்.


இரண்டாவது :- செயல் ரீதியாக ஏற்படக்குடிய குப்ர் உதாரணமாக :- ஒரு சிலைக்கு ஸ{ஜுத் செய்தல் அல்லது சூரியன் சந்திரனுக்கு சுஜுது செய்தல், குர்ஆனை ஏறிமிதித்தல், இன்னும் குர்ஆனை குப்பை கூலத்தில் எறிதல், அல்லாஹ்வுடைய திருநாமங்கள் எழுதப்பட்ட தாள்களை, காகிதங்களை அழுக்கான இடங்களில் எறிதல், காபிர்களுடைய அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்தும் அல்லது பரக்கத் பெறும் நோக்கில் அணிதல்.


மூன்றாவது :- வார்த்தை ரீதியாக ஏற்படக்குடிய குப்ர்:- அல்லாஹ்வை அல்லது ரஸ_லை ஏசுதல், இஸ்லாம் மார்க்கத்தை இழிவாகப் பேசுதல், அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்று கூறுதல், ஸஹாபாக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஏசுதல், அல்லாஹ்வுக்குப் பிள்ளைகள் இருப்பதாகக் கூறுதல், இஸ்லாமிய அடையாளச் சின்னங்களை இழிவாகப் பேசுதல்.
மேற்கூறப்பட்ட விடயங்களில் ஏதாவது ஒன்றை செய்து இஸ்லாம் மார்க்கத்தை விட்டு வெளியேறியவர் அதனை முற்று முழுதாக விட்டு விட்டு மீண்டு இஸ்லாத்திற்கு வரவேண்டும்.

Post a comment

Your email address will not be published.

Related Posts