அல்லாஹ்வை அறிவது கடமையாகும்.

அல்லாஹ்வை அறிவதென்றால் அல்லாஹ்வுக்கு வாஜிபான அதாவது இருக்கவேண்டிய தன்மைகளையும்இ இருக்கக்கூடாத தன்மைகளையும் ஜாயிஸான தன்மைகளையும் அறிவதன் மூலமே அல்லாஹ்வை ஈமான் கொள்வது சாத்தியமாகும். எனவே ஒரு மனிதன் கட்டாயம் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய 13 (20) தன்மைகளை அறிவது கட்டாயமாகும்.
01- (الوجود) அல்வுஜுது:- அல்லாஹ் உள்ளான். இவ்வுலகம் சீரான முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றமையே இதற்கான பெரிய ஆதாரமாகும். அதாவது சூரியன் காலையில் உதிக்கின்றது. மாலையில் மறைகின்றது. மழை பொழிகின்றது. காற்று வீசுகின்றது இவை அனைத்தையும் சரியான முறையில் சீராக இயக்கக்கூடியவனாக அல்லாஹ் உள்ளான் அவன் இல்லையெனில் இவை ஏதும் நடக்காது.


02- (القدم) அல்கிதமு:- அல்லாஹ்வுக்கு ஆரம்பம், தொடக்கம் என்பது கிடையாது. அவனால் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துக்களுக்கும் ஓர் ஆரம்பம் உள்ளது.


03-( البقاء) அல்பகாஉ :- அல்லாஹ் அழிவில்லா முடிவில்லா நிலைகொண்டவன். ஆனால் அவனால் படைக்கப்பட்ட அனைத்தும் அழிவையும், முடிவையும் அடையும் நிலையிலேயே உள்ளன.


04-( المخالفة للحوادث ) அல்முகாலபது லில்ஹவாதிஸி :- படைப்புக்களுக்கு எந்த விதத்திலும் அல்லாஹ் ஒப்பாக மாட்டான். மேலும் படைப்புகளின் தன்மைகளையும் பெறமாட்டான்.


05-(القيام بنفسه) அல்கியாமு பிடீனப்ஸிஹி :- அல்லாஹ் படைப்புகளின் பக்கம் தேவையற்றவன். அனைத்துப் படைப்புக்களுக்கும் அவனின் உதவி அவசியமாகும்


06-( الوحداينة ) அல் வஹ்தானிய்யஹ் :- அவன் இணையின்றி தனித்தவன். அவனுடைய ஆட்சியில் மற்றும் செயல்களில் அவனுடன் இணைந்து யாரும் செயல்படுவதில்லை.


07-( الحياة ) அல் ஹயாது :- அல்லாஹ் மரணமில்லாதவன். அவனுடைய ஹயாத் எங்களுடைய ஹயாத்தைப் போன்றதல்ல. ஏனெனில் எங்களுடைய ஹயாத் இரத்தம், நரம்பு, மறபோன், சதை, உயிர் (ரூஹ்) போன்றவற்றை உள்ளடக்கிக்கொண்டதாகும். அவனுடைய ஹயாத் இவற்றை உள்ளடக்கிக்கொள்ளாது.
குறிப்பு :- அல்லாஹ் உயிருள்ளவன் எனக் கூறப்படமாட்டாது மாறாக அழிவில்லாதவன் என்றே கூறப்படும்.


08- ( القدرة ) அல் குத்ரஹ்:- அவன் தனக்குத் தகுதியான அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன். அல்லாஹ் தான் நாடியதை ஆக்குவதற்கும் அழிப்பதற்கும் சக்தியுள்ளவன். அவனுக்கு இயலாத எதுவும் கிடையாது.


09-( الإرادة ) அல் இராதஹ் :- அல்லாஹ் நாடும் தன்மைகொண்டவன். மனிதன் பிறந்தது முதல் மரணிக்கும் வரை செய்யக்கூடிய அனைததுச் செயல்பாடுகளும் அல்லாஹ்வின் நாட்டத்தின் பிரகாரமே நடைபெறுகின்றன. அவனுடைய நாட்டமின்றி ஒரு அணு கூட அசையாது. மனிதனுக்கு மகிழ்வைத் தரக்கூடிய விடயங்கள், துக்கத்தை தரக்கூடிய விடயங்கள், இலாபம், நஷ்டம் அனைத்துமே அவனின் எற்பாட்டின் பிரகாரமே நடைபெறுகின்றன. அல்லாஹ் நாடிய ஒரு விடயத்தை யாராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது. மேலும் அவன் நாடாத ஒரு விடயத்தை யாராலும் நடைபெறச் செய்யவும் முடியாது.


10-( البصر ) அல் பஸர் :- அல்லாஹ் பார்க்கும் தன்மைகொண்டவன். அல்லாஹ் யாவற்றையும் கண்களோ, விழிகளோ அல்லது வேறுகருவிகளோ இன்றி பார்க்கும் தன்மைகொண்டவனாகும். அவனுடைய பார்வையானது வெளிச்சம், ஒளி என்பவைகளின் பக்கம் தேவைகண்டதல்ல. நம்பார்வைகள் எவையெவையின் பக்கம் தேவைகாணகிறதோ அல்லாஹ்வின் பார்வையானது அவைகள் அனைத்தை விட்டும் பரிசுத்தமானதாகும்.


11-( السمع ) அஸ் ஸம்உ :- அல்லாஹ் அனைத்தையும் செவிகளின்றி கேட்;பவன். அவனுடைய கேட்கும் தன்மையானது காது, செவிப்புலன்கள் பக்கம் தேவைகாண்பதில்லை. எச்சத்தமாக இருப்பினும் அவை அனைத்தையும் கேட்பவன். ஆனால் நம் கேட்கும் தன்மையானது காது, காதுக்குழி, குறிப்பிட்ட ஒரு எல்லை போன்ற வற்றைக்கொண்டே செயல்படுகிறது.


12-( الكلام ) அல் கலாம் :- அல்லாஹ் எழுத்துக்கள், சத்தம், மொழிகளின்றி பேசும் தன்மை கொண்டவன். அவனுடைய பேச்சுக்கு எழுத்துக்களோ, சத்தமோ, மொழியோ, நாவோ, உதடோ எதுவும் கிடையாது. ஆனால் மனிதனுடைய பேச்சுக்கு எழுத்துக்கள், மொழி, சத்தம் போன்றன உள்ளன. நாளை மறுமையில் அல்லாஹ்வின் பேச்சை மக்கள் அனைவரும் விளங்கிக்கொள்வார்கள்.


13-( العلم ) அல் இல்மு :- அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அவனது அறிவுக்கு புலப்படாத மறைந்த எதுவும் இல்லை. இவ்வுலகில் நடந்தவைகள், நடந்துகொண்டிருப்பவைகள், நடக்கப்போகின்றவைகள் அனைத்தையும் அல்லாஹ் நன்கு அறிந்தவன். தெரியாமலிருந்து பின்பு ஒன்றை தெரிந்துகொண்டான் என்றோ அல்லது அவன் மறந்திருந்தான் என்றோ அல்லாஹ்வுடைய இல்ம் விடயத்தில் நம்பிக்கை கொள்ளப்படமாட்டாது.


குறிப்பு :- மேற்கூறப்பட்ட பண்புகளை கொண்டவனே நாம் வணங்கும் அல்லாஹ்வாகும். இப்பண்புகளை அல்லாஹ்வையன்றி வேறொருவருக்கு இருப்பதாக நம்புவது குப்ராகும். மேற்கூறப்பட்ட அல்லாஹ்வுடைய பண்புகளாவன வேறொன்றினால் அல்லாஹ்வுக்கு வழங்கப்பட்டதோ அல்லாஹ்வே தனக்குத்தானே படைத்துக்கொண்டவைகளோ அல்ல. அப்பண்புகளானது ஆரம்பமில்லாத தன்மை கொண்டதாகும். மேலும் அப்பண்புகளாவன இருத்தல், மறைதல், கூடுதல், குறைதல் போன்ற நிலைகளுக்கு உட்பட்டவையல்ல. அல்லாஹ்வுக்கு இருப்பதாக மேற்கூறப்பட்ட பண்புகளுக்கும் படைப்பினங்களின் பண்புகளுக்கும் எவ்வித ஒப்போ, உவமையோ கிடையவே கிடையாது.
அல்லாஹ் பற்றிய நம் நம்பிக்கையை மேற்கூறப்பட்டவாறு ஆக்கிக்கொள்வோமேயானால் நிச்சயமாக நாம் அல்குர்ஆனும் அல்ஹதீஸ{ம் கூறும் உண்மை முஃமின்களாகிவிடுவோம்.

Post a comment

Your email address will not be published.

Related Posts