அர்ஷைப் படைத்தவன் யார்?அல்லாஹ்.


அர்ஷ் என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட படைப்புகளில் மிகப்பிரம்மாண்டமான பெறுமானத்தைக் கொண்ட ஒன்றாகும். அதற்கு 4 கால்கள் (இருக்கைகளுக்கு இருப்பது போன்று) உள்ளன.

அந்த அர்ஷ{தான் சுவனலோகத்தின் முகடாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த அர்ஷை 4 மலக்குமார்கள் சுமந்த வண்ணம் உள்ளார்கள். கியாமத் நாளின் போது 8 மலக்குகள் அதனை சுமப்பார்கள்.

அர்ஷானது இந்த 7 வானம், 7 பூமிகளை விட பல்லாயிரம் மடங்கு விசாலமானதாகும். இது போன்ற பிரம்மாண்ட படைப்புகளையும் தன்னால் படைக்க முடியும் என்பதற்காக இந்த அர்ஷ் படைக்கப்பட்டதே தவிர அல்லாஹ் தான் இருக்கும் இடமாக படைக்கவில்லை என்பதே உண்மை. இவ்வாறு இன்று வரை வாழும் உண்மையான முஃமின்களின் நம்பிக்கை இருந்து வருகிறது. கவனத்துடன் சிந்திப்பவர்களுக்கு அர்ஷ் என்பது அல்லாஹ் இருக்கும் இடமல்ல. அதுவும் படைப்புகளில் ஒரு படைப்புதான் என்ற சத்திய நிலை தெரியவரும். இந்த அர்ஷின்பால் அல்லாஹ்வுக்கு எத்தேவையும் கிடையாது. ஏனெனில் அர்ஷ் படைக்கப்பட முன்னும் அல்லாஹ் அர்ஷின் உதவியோ அதன் பக்கம் தேவையோ ஏதுமின்றி உள்ளவன். அவன்தான் அர்ஷை உருவாக்கினான். படைத்தான். அவன் படைத்த எதன் பக்கமும் அவன் தேவைகாண்பதில்லை

மேலும் அர்ஷின் மூலமோ அல்லது வேறுபடைப்புகளின் மூலமோ அல்லாஹ் எது வித பிரயோசனமும் பெறுவதில்லை என்பதே சுன்னத் ஜமாத்தினராகிய நமது நம்பிக்கையாகும். அல்லாஹ் இந்த அர்ஷை தான் இருப்பதற்காகவோ அல்லது உட்காருவதற்காகவோ படைக்கவில்லை. எவர் அல்லாஹ் அர்ஷை உட்காருவதற்காக படைத்துள்ளான் என சொல்கிறாரோ அல்லது நம்புகிறாரோ திட்டவட்டமாக அவர் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியானவராவார். ஏனெனில் அவர் மேற்கூறப்பட்ட திருக் குர்ஆன் வசனத்திற்கு முற்றிலுமாக முறண்பட்டவராக ஆகிவிடுகிறார். திருக்குரஆன் வசனத்திற்கு முறண்படுவது ஒரு மனிதனை இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் அல்லது உட்கார்ந்து இருக்கிறான் என்பது யஹதி (யூதர்கள்) உடைய நம்பிக்கை ஆகும். இவ்வாறு அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் அல்லது உட்கார்ந்து இருக்கின்றான் என்ற கருத்தை நபி ஸல்லல்லாஹ அலை;ஹிவஸல்லம் அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ அல்லது முன் வாழ்ந்த முஸ்லிம்களோ யாரும் கூறவில்லை. நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடக்கம் முஹம்மத் ஸல்லல்லாஹ_ அலை;ஹிவஸல்லம் வரைக்கும் வாழும் எல்லா முஸ்லிம்களினதும் ஏகோபித்த கருத்து அல்லாஹ் இடமின்றி திசையின்றி உள்ளான் என்பதாகும். இதற்கு மாற்றமான புதுமையான கருத்துக்களை நம்பி நம் ஈமானை இழந்து விடுவதை விட்டும் நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.
அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட அனைத்துப் படைப்புகளும் (இடங்கள், திசைகள், அர்ஷ், சுவர்க்கம், காற்று உட்பட அனைத்தும்) இல்லாமையில் இருந்து உருவாக்கப்பட்டவைகளாகும். இவை அனைத்தையும் படைக்க முன் அல்லாஹ் எந்த இடமும் எந்த திசையும் பெறாதவனாகவே உள்ளவன். அவற்றைப் படைத்ததன் பின்பும் இடமின்றி திசையின்றியே உள்ளவன். இந்த ஈமானின் மீதே ஸஹாபாக்கள், தாபிஈன்கள் தபஉத் தாபிஈன்கள் முன்னோர்கள் பின்னோர்கள் அனைவரும் இருந்தனர், தற்போதும் இருந்து வருகின்றனர்.
அல்லாஹ்வை எம்மால் கற்பனைசெய்ய முடியாது
அல்லாஹ்வை உள்ளத்தினால் கற்பனைசெய்வது தடுக்கப்பட்ட ஒரு செயலாகும். இவ்வாறு அல்லாஹ்வை கற்பனைசெய்வது ஒரு முஸ்லிமை இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேற்றிவிடும். உள்ளத்தினால் அவனை எவ்வாறுதான் கற்பனை செய்தாலும் அக்கற்பனைக்கு அவன் ஒருபோதும் உள்வாங்கப்படமாட்டான். ஒரு மனிதன் தன்னால் அல்லாஹ்வை கற்பனை செய்ய முடியாது என தன் இயலாமையை ஏற்றுக்கொள்வதே புத்தியாகும்.

Post a comment

Your email address will not be published.

Related Posts